வடகம்

Description:

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – ஒரு கிலோ.
உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு – 200 கிராம்
முழுப் பூண்டு – 6.
கடுகு – 100 கிராம்.
சோம்பு – 100 கிராம்.
சீரகம் – 100 கிராம்.
வெந்தயம் – 100 கிராம்.
விரலி மஞ்சள் – ஒன்று
(அல்லது ) மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி.
கறிவேப்பிலை – 3 கப்.
விளக்கெண்ணெய் – அரை கப்.

சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி உளுத்தம் பருப்பைத் தனியாக 2 மணி நேரம் ஊற வைத்து பூண்டுப் பல்லை சிறிய உரலில் தட்டி விரலி மஞ்சளை அம்மியில் அரைக்கவும். பெரிய வாணலியில் ஊறிய உளுத்தம் பருப்பை கசடு நீக்கி, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டுப், சேர்த்து பாதியளவு விளக்கெண்ணெய் ஊற்றி வதக்கவும். அப்படியே அள்ளிச் சாப்பிட வேண்டும் போல வாசனை வரும்.

அப்போது மற்ற பொருட்களையும் சேர்த்து வதக்கி மீதி விளக்கெண்ணெய்யை ஊற்றி நன்றாகப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை உதிர்த்து மீதி இருக்கும் விளக்கெண்ணெய்யை ஊற்றி பிசைந்து மறுபடியும் உருண்டைகளாகப் பிடித்து வெயிலில் காய விடவும். ஒரு வாரம் காய்ந்ததும் எடுத்து ரசம், குழம்பு என தேவையானவற்றுக்கு பயன்படுத்தலாம். ஆறு மாதங்கள் வரை கெடாது.

Loading...

Post a Comment

111