ப்ரென்ச் ஃப்ரைஸ்

Description:

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 3,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத்தூள் – தேவையான அளவு,
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி விரல் வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். தண்ணீரில் போட்டு 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு கொதி தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வதக்கவும். இதை நன்றாக வடிகட்டி, ஒரு ஜிப் லாக் பை அல்லது ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிற மாக பொரித் தெடுத்து சாஸுடன் பரிமாறவும்.

குறிப்பு: பொரிக்கும் போது ஒரு முறை எண்ணெயில் முக்கால்பதம் பொரித்து எடுத்துவிட்டு சிறிது ஆறியதும், மறுபடியும் எண்ணெயில் போட்டு எடுக்கும்போது நன்கு க்ரிஸ்பாக இருக்கும்.

Loading...

Post a Comment

111