பூசணி புட்டிங்

Description:

என்னென்ன தேவை?

பூசணித்துருவல் – 1 கப்,
சைனா கிராஸ் – 1 துண்டு,
சர்க்கரை – 1 கப்,
பால் – 1 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின்பு சர்க்கரை, பூசணித்துருவல் சேர்த்து வேக விடவும். பூசணித் துருவல் வெந்ததும் சைனா கிராஸ் சேர்த்து கிளறவும். சைனா கிராஸ் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். பின்பு சிறு சிறு கண்ணாடி கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பரிமாறவும்.

Loading...

Post a Comment

111