பாகற்காய் சாதம்

Description:

உதிராக வடித்த சாதம் – 2 கப்,
பொடியாக நறுக்கிய பாகற்காய் – 1,
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
புளி – எலுமிச்சம்பழ அளவு,
உப்பு – தேவைக்கு,
தேவையானால் பொடித்த வெல்லம்- சிறிது.

தாளிக்க…

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை -5இலைகள்,
பெருங் காயத்தூள் – 1/4 டீஸ்பூன்.

அலங்கரிக்க…

வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,
வறுத்த காய்ந்தமிளகாய் – 3,
கொத்தமல்லித்தழை, புதினா – தேவைக்கு.

புளியை 1 கப் வெந்நீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பருப்புகள் பொன்னிறமாக வறுபட்டதும், பாகற்காய் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பின்பு புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சேர்த்து நன்கு கிளறி, சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். புதினா, கொத்தமல்லித்தழையை தூவி, அதன் மேல் வேர்க்கடலை, காய்ந்தமிளகாய் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நெய்யில் வறுத்து, சாதம் கலக்கும் போது கலந்து சேர்க்கலாம்.

Loading...

Post a Comment

111