பட்டர் முறுக்கு

Description:

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 3 கப்,
பொட்டுக்கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு – 1/2 கப்,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
பொடி உப்பு – 1½ டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

அனைத்து மாவையும் கலந்து சலித்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து 2 அல்லது 3 பகுதியாக சம அளவில் பிரித்துக் கொள்ளவும். ஒரு பகுதியில் தண்ணீர் தெளித்து பிசைந்து, மாவை பதமாக தயாரித்துக் கொள்ளவும்.

ஒற்றை நட்சத்திர அச்சைப் பயன்படுத்தி முறுக்கு அச்சின் உள்ளே எண்ணெய் தடவிக் கொண்டு மாவை நிரப்பி சூடான எண்ணெயில் நேரடியாக முறுக்குகளைப் பிழிந்து பொன்னிறமாகவும், மொரமொரப்பாகவும் பொரித்தெடுக்கவும். எண்ணெயிலிருந்து வடித்தெடுத்து ஆறியதும் பரிமாறவும்.

Loading...

Post a Comment

111