தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

Description:

என்னென்ன தேவை :

பச்சை பட்டாணி – அரை கப்
பச்சரிசி – 2 கப்
தேங்காய் பால் – 2 கப்
தக்காளி – 5
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கடுகு, சீரகம் தலா – அரை டீஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்


எப்படிச் செய்வது :

முதலில் அரிசியை சுத்தம் செய்து தேங்காய் பால், 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து உதிரியாக வேக வைக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். நெய்யை காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்கவும். சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்து கலக்கவும். மனம் விரும்பும் சுவையில் தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.

Loading...

Post a Comment

111