கருவாடு முட்டை ஆணம்

Description:

தேவையான பொருட்கள்

விரும்பிய கருவாடு – 50 கிராம்

முட்டை – 4

சிறிய வெங்காயம் – 10

தக்காளி – 1

புளி – அரிநெல்லியளவு

பூண்டு -8-10 பல்

மிளகுத்தூள் – ஒன்னரை டீஸ்பூன்

மல்லித்தூள் – 2டீஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்

தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்

நல்ல எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்

கடுகு,உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்

கருவேப்பிலை – 2இணுக்கு

உப்பு – சிறிது

செய்முறை :

முதலில் கருவாட்டை கழுவி சுத்தம் செய்து கழுவி துண்டு போட்டு எடுத்து கொள்ளவும்.முட்டையை அவித்து தோல் உரித்து வைக்கவும்.

மிக்ஸி கப்பில் மிளகுத்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,மஞ்சள்தூள்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,தேங்காய் துருவல் சிறிது தண்ணீர் சேர்த்து பட்டுப்போல் அரைத்து எடுக்கவும்.

அரைத்த விழுதை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.உப்பு சிறிது சேர்க்கவும்.புளிப்பு தேவைப்பட்டால் ஒரு கொட்டை புளி கரைத்து விடவும்.நன்கு கொதி வந்து மசாலா வாடை அடங்கியதும் கருவாடை போட்டு கொதிக்க விடவும்.

நன்கு கொதிவரவும் அவித்த முட்டையை நாலாபக்கமும் கீரியோ அல்லது பாதியாக கட் செய்தோ போடவும்.ஆணம் அவரவர் விருப்பப்படி கெட்டித்தன்மை வைத்துக் கொள்ளலாம்.

ஒரு தாளிப்பு கரண்டியில் நல்ல எண்ணெய் விட்டு காயவும்,கடுகு உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை,நறுக்கிய வெங்காயம் போட்டு தாளித்து கொதிக்கும் கருவாடு முட்டை ஆணத்தில் கொட்டி கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.

சுவையான கருவாட்டு முட்டை ஆணம் ரெடி

Loading...

Post a Comment

111