கம்பு மீல்மேக்கர் 65

Description:

தேவையான பொருட்கள்

மீல் மேக்கர் – ஒரு பாக்கெட்
கம்பு மாவு – ஒரு கப்
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பச்சரிசி மாவு – கால் கப்
கிறிஸ்பி ஃப்ரை மிக்ஸ் பவுடர் – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மீல்மேக்கரை அரை மணி நேரம் ஊறவைத்து இரண்டு முறை கழுவி பிழிந்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் மீல்மேக்கர், கம்பு மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கிறிஸ்பி ஃப்ரை மிக்ஸ் பவுடருடன் பச்சரிசி மாவு, அரை கப் தண்ணீர் சேர்த்துச் சிறிது கெட்டியாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஊறவைத்த மீல்மேக்கரை மாவுக் கலவையில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வாசமான மீல்மேக்கர் 65 தயார். சில்லி சாஸுடன் பரிமாறவும்.

Loading...

Post a Comment

111