ஏழே நாட்களில் எடை குறைத்து நம்மை அழகாக்கும் சைவ டயட்

Description:

உடல் எடை குறைப்பில் பல்வேறு வகைகள் வந்து விட்டன. அதில் ஒருவகைதான் ஏழு நாட்களில் எடை குறைக்கும் வெஜிடேரியன் டயட்.

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தாலும் உணவில் கவனமாக இல்லாவிட்டால் குறைந்த எடை மீதும் இரண்டு மடங்காக ஏறிவிடும். இந்த சைவ எடையை பின்பற்றுவதன் மூலம் எளிதில் எடை குறைக்கலாம்.

முதல் நாள்
டயட்டின் முதல் நாள் அன்று எல்லாவிதமான பழங்களையும் நீங்கள் ஒரு கை பார்க்கலாம். திராட்சை வாழைப்பழம் மாம்பழம் மற்றும் லிச்சி பழங்களை தவிர்த்து விட வேண்டும். ஒரு நாளைக்கு 30 முறை கூட சாப்பிடுங்கள் ஆனால் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள்.

இரண்டாம் நாள்
டயட்டின் இரண்டாம் நாளில் வேக வைத்த காய்கறிகளை தவிர வேறு எதனையும் நீங்கள் சாப்பிட கூடாது. ஆரம்பத்தில் ஒரு உருளைக்கிழங்களோ சிறிது வெண்ணையில் போட்டு வாட்டி அதனுடன் உங்கள் காய்கறி டயட் ஆரம்பியுங்கள். அதன் பின் எந்த வகையான காய்களை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்து கொள்ளலாம். இதிலும் அளவில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் உப்பில் மட்டும் வேகவைத்து (எண்ணெய் கூடாது) சாப்பிடவும்.

மூன்றாம் நாள்
முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் டயட்டை இந்த மூன்றாம் நாளில் சேர்த்து எடுக்கலாம். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு காய்கறிகள் மற்றும் பழவகைகளை சாப்பிடலாம். இந்தமுறை உருளை கிழங்கை தவிர்த்து விடுங்கள். மற்ற பழவகைகளில் இருந்து உங்களுக்கு கார்ப்ஸ் கிடைப்பதால் உருளைக்கிழங்கு அவசியமில்லை. அதிக அளவு தண்ணீரையும் குடிக்க வேண்டியது அவசியம்.

நான்காம் நாள்
இந்த நான்காம் நாளன்று தடை செய்யப்பட்ட பழமான வாழைப்பழத்தை 6 எண்ணிக்கை வரை எடுத்து கொள்ளலாம். அதன் பின் பால் 4 தம்ளர் வரை குடிக்கலாம். மதிய உணவிற்கு குடை மிளகாய் வெங்காயம் பூண்டு தக்காளி போன்றவற்றை சேர்த்து நீர்பதத்தில் சூப் செய்து குடிக்கவும். ஒரு முறை மட்டுமே இந்த சூப் குடிக்க வேண்டும்.

ஐந்தாம் நாள்
இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். நீங்கள் சொல்வதை கேட்டு அப்படியே செய்த உங்கள் உடலிற்கு நாக்குக்கு ருசியாக நல்ல உணவுகளை தரப் போகிறீர்கள். தக்காளி, முளைவிட்ட பயிர் வகைகள் ஏன் சீஸ் வகைகளை கூட நீங்கள் ருசிபார்க்கலாம்.மீல் மேக்கர் சூப் வைத்து சாப்பிடலாம். மேற்கண்ட அணைத்து பொருட்களையும் ஒன்றாக்கி வேகவைத்து சாப்பிடுங்கள். அதிகமான தண்ணீர் பருக வேண்டும்.

ஆறாம் நாள்
தக்காளியை தவிர முளை கட்டிய பயிர்கள் மற்றும் பனீர் வகைகளை இன்று சாப்பிடலாம். இன்று தக்காளி மட்டும் நீங்கள் சாப்பிட கூடாது. வழக்கம்போல் காய்கறி சூப் அல்லது பழ சால்ட் வகைகளை எடுத்து கொள்வதால் ஆற்றல் கிடைக்கும்.

ஏழாம் நாள்
இன்று நீங்கள் ஒரு இறகில்லா தேவதை ஆகி இருப்பீர்கள். உடலும் மனமும் லேசாகி பறப்பது போன்ற உயர்வு ஏற்படும். இன்று நீங்கள் உங்கள் உணவை பழ சாறுடன் தொடங்குங்கள். இன்று ஒரு கப் பழுப்பு அரிசி சாதம் அரை சப்பாத்தி போன்றவைகளை திட உணவாக எடுத்து கொள்ளலாம். இன்றைய நாளின் இறுதியில் அதிக நீரை பருகி உங்கள் டயட்டை முடிக்கலாம்.

இதன்பின் வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் உதவியுடன் குறிப்பிட்ட இடைவெளிகளில் இது போன்ற டயட்களை பின்தொடர்வது உங்கள் எடையை கட்டுக்குள் வைக்கும்.

Loading...

Post a Comment

111