ஊட்டியில் 300 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்

Description:
1

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து குன்னுார் சென்ற அரசு பஸ், மேல்மந்தடா என்ற இடத்தில் சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழுந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. விபத்து எதனால் ஏற்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

ஊட்டியில் கவிழ்ந்த அரசு பஸ்

நீலகிரி மாவட்டம், குன்னுார் பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ், ஊட்டியிலிருந்து நேற்று காலை 34 பயணிகளுடன் குன்னுார் புறப்பட்டது. பஸ்ஸை ஊட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (40) இயக்கியுள்ளார். நடத்துநராகப் பிரகாஷ் செயல்பட்டுள்ளார். சுமார் 11 மணியளவில் மந்தடா என்ற மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்த நீலகிரி மாவட்டக் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்.பி சண்முகபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும், படுகாயம் அடைந்த பயணிகள் 19 பேரை 18 ஆம்புலன்ஸ்கள் உதவியுடன், ஊட்டி அரசு மருத்துவமனையிலிருந்து கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் காெண்டு செல்ல போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் விரைந்து வேலை செய்து போக்குவரத்தைச் சீரமைத்துக் கொடுத்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

ஊட்டி டேவிஸ் டேல் பகுதியைச் சேர்ந்த தர்மன் (64), குன்னூரைச் சேர்ந்த தினேஷ் (32), ஊட்டி கொலக்கொம்பைப் பகுதியை நந்தகுமார் (36), பிரபாகரன் (50), பெங்களூருவை சேர்ந்த சாந்தகுமார் (55), ஜெய்ஸ்ரீ (49) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட 19 பேரில், ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அல்மாஷ் (29) என்ற பெண் பலியானார்.

ஒரு கட்டத்தில் விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் ஊட்டி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் உதவும் மனப்பாண்மையில் அங்கு குவிந்தனர். ஆனால், பாேலீஸார் அவர்களைக் கூட்டம் கூடாமல், வேடிக்கை பார்க்காமல் கலைந்து செல்லுமாறு கூற, “நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பஸ்கள், ஒன்றுகூட முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை, இதனால் தான் விபத்து ஏற்படுகிறது” என்று டவுன் டி.எஸ்.பி திருமேணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கலைந்து சென்றன

Post a Comment