உப்புமா கொழுக்கட்டை தயாரிப்பது எப்படி

Description:

தேவையான பொருட்கள்

பச்சரிசி நொய் (குருணை) – 2 கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
தேங்காய் எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, 5 கப் தண்ணீர் ஊற்றி… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது நொய் சேர்த்து, கைவிடாமல் கிளறி முக்கால் வேக்காடு பதத்தில் இறக்கவும்.

ஆறியதும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து கிளறி, உருண்டைகளாக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னி நல்ல ஜோடி.

Loading...

Post a Comment

111