இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பரத்

Description:

காதல்,பாய்ஸ், வெயில் என பல படங்களில் நடித்தவர் பரத். அவர் கடைசியாக முருகதாஸின் ஸ்பைடர் படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் ட்விட்டரில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். பரத்தின் மனைவி ஜெஷ்லி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தாயும் இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக பரத் கூறியுள்ளார்.

பரத்துக்கும் பல் மருத்துவரான ஜெஷ்லிக்கும் 2013 செப்டம்பர் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஒரு வருடமாக காதலித்த இவர்கள் குடும்பத்தினர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர். பரத் பிராமின், ஜேஷ்லி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Post a Comment

111