இஞ்சி சாதம்

Description:

உதிராக வடித்த சாதம் – 2 கப்,
தோல் நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன்,
புளி – எலுமிச்சைப்பழம் அளவு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 6,
உப்பு – தேவைக்கு,
அலங்கரிக்க தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – தேவைக்கு.

தாளிக்க…

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 5 இலைகள்.

மிக்சியில் இஞ்சி, புளி, மஞ்சள் தூள், காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அரைத்த விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரியும் வரை கிளறவும். பின்பு சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Loading...

Post a Comment

111