ஆந்திர மசாலா மீன் குழம்பு

Description:

தேவையான பொருட்கள்

மீன் – 300 கிராம்
எண்ணெய் – 1/2 கப்
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
தக்காளி – 1
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு பொறிக்கவும். அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும். வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து கலக்கவும். அதன் பின்னர் தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.

வெந்த பின் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும். சூடான சாதத்துடன் இந்த காரமான மீன் குழம்பை அனுபவிக்கவும்.

Loading...

Post a Comment

111