அரிசி அப்பளம்

Description:

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 1 கிலோ,
உப்பு – தேவைக்கு,
சீரகம் – 4 டீஸ்பூன்,
வட்டமாக நறுக்கிய வாழை இலை – 10.

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கெட்டியாக நைசாக அரைத்து இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் காலை அரைத்த மாவில் சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். வட்டமான வாழை இலையில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்க்கவும். இட்லிப்பானையில் அப்பளத்தை வைத்து 5 நிமிடம் மூடிபோட்டு வேகவிடவும். வெந்த அப்பளத்தை வெயிலில் காயவைக்கவும். அரை மணி நேரம் கழித்து இலையில் இருந்து அப்பளத்தை எடுத்து துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் காயவைக்கவும். 4 நாட்கள் வெயிலில் நன்றாக காயவைத்து டப்பாவில் போட்டு வைக்கவும். எண்ணெயில் பொரித்தும், தணலில் சுட்டும் உபயோகிக்கலாம்.

Loading...

Post a Comment

111